160 x 600 left

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி 9விக்கெட்டால் வெற்றி!

0 18

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக எவின் லூயிஸ் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நதன் குல்டர்நைல் 14 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 91 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணிசார்பாக இசான் கிசானின் அரைசதத்தை பெற்றுக் கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 02 விக்கெட் இழந்து 94 ஓட்டத்தை பெற்று வெற்றியடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.