இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவர், கம்லா ராஜா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள், அதிர்ந்துள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையோடு ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், நான்கு கால்களோடு இருந்துள்ளது.
இது பற்றிய விரிவான தகவல்களையும் உள்ளடக்கியதாக இன்றைய பிரதான செய்திகள்.