இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி,பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிட சென்ற போதே குறித்த பிரித்தானிய சுற்றுலா பயணி மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றுலாப் பயணி மற்றுமொரு பெண்ணுடன் நேற்று (05) கண்டிக்கு வந்து காலை 10.30 மணியளவில் பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்துள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.