Friday 17 March 2023

நள்ளிரவோடு குறைகிறது டீசலின் விலை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளின் காரணமாக எரிபொருட்களின் விலைகளில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. பின்னர், நாட்டின் நிலைமைகளில் சற்று மாற்றம் ஏற்பட ஆரம்பித்ததன் அடிப்படையில், எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்ற நிலையில், இன்று டீசலின் விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,டீசலின் விலையை (Auto Diesel) 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *