பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்ததோடு, மேலும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இது பற்றிய மேலதிக விடயங்களையும் உள்ளடக்கியதாக இன்றைய முக்கிய செய்திகள்.