நாட்டின் அசாதாரண நிலை காரணமாக பல்வேறுபட்ட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நிலை சிறிது சிறிதாக மாறிவருகின்றமையை காணமுடிகின்றது.
அதனடிப்படையில், ஏற்கனவே சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், மேலும் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விலை குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்,
சிவப்பு பச்சை அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ. 199 ஆகவும்,
கீரி சம்பா அரிசியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ. 225 ஆகவும்,
பெரிய வெங்காயத்தின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ. 225 ஆகவும்,
நெத்தலி கருவாட்டின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டு ரூ. 1150 ஆகவும் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.