Monday 20 March 2023

பட்டப்பகலில் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன் – மனைவி

காலி ஹிக்கடுவை, வேவல பகுதியில் கணவன் மற்றும் மனைவி இருவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றுக்கு எதிரில் உள்ள வீதியால் அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டு இருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததோடு, கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,படுகாயமடைந்த மனைவி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர், சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட்டு வந்த, ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வரும் தகராறே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,கொலையாளிகள் வந்த கார் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *