Monday 20 March 2023

காலியில் தொடருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து – ரஷ்ய பிரஜை உட்பட இருவர் பலி

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் தொடருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப தொடருந்து கடவைக்கு அருகில், பயணித்த முச்சக்கர வண்டி தொடருந்தில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தொடருந்து கடவையில் உள்ள சமிக்ஞை விளக்கு இயங்காத நிலையில், அது குறித்து வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இருந்தும் அதனை சாரதி கவனிக்காமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *