இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான இந்த சந்தேக நபர் இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி உட்பட, இன்றைய முக்கிய செய்திகளை உள்ளடக்கியதான செய்திகளின் தொகுப்பு.