நாட்டில் பரவலாக காற்றின் தரச்சுட்டெண் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளதால், வெளியில் செல்வோர் முக்கியமாக முகக்கவசத்தினை அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள நிலையில் இதய நோய் முதலிய பல நோய்கள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.