Friday 17 March 2023

காயப்பட்டவர்களை ஏற்ற வந்த அம்புலன்ஸ் மீதும் கோரத்தாக்குதல்

பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.

வடக்கு – கிழக்கில் வாள் வெட்டு கலாச்சாரமும், போதைப்பொருள் பாவனையும் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் சாதாரண பொது மக்கள் மத்தியில் இது குறித்த அச்சம் அதிகரித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில், இந்த விடயங்களை உள்ளடக்கியதான இன்றைய முக்கிய செய்திகளை கீழுள்ள காணொளி வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *