யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் தொடருந்துடன் மோதி மினி வான் விபத்துக்குள்ளானதில் வானின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று நண்பகல் 1.30 மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர், அரியாலையை சேர்ந்த 31 வயதான தனபாலசிங்கம் சுரேந்தர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்து நடந்த குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையே காணப்படுவதாகவும், இதனால் அங்கு அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை பொலிஸாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதோடு விபத்து குறித்த மேலதிக விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.