Monday 20 March 2023

கிளிநொச்சியில் இன்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, உடல் கூறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்தவரின் உடலை உறவினரிடம் ஒப்படைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *