மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு இராணுவ நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
வங்கியொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் அவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாணவர்கள் தவிர மேலும் 4 இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.