எரிபொருள் விநியோகத்தை மேலும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது அமுலிலுள்ள QR நடைமுறையின் சாதகமான நிலைப்பாட்டை அடுத்து அதனை மேலும் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்கான எரிபொருள் தேவையின் அடிப்படையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.