கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத பாதையை சீரமைக்க வலியுறுத்தி பலரும், சமீப காலமாக கேட்டு வரும் நிலையில் அது தொடர்பான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது,பழுதடைந்த தொடருந்து பாதையை சீரமைக்கும் பணிகளுக்காக சுமார் 5 மாதங்கள் தேவைப்படும் என்பதால், குறித்த காலப்பகுதியில் தொடருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி.ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான தொடருந்து சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.