நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதை அடுத்து நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (9) விசேட விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதன்படி நாட்டில் பரவலாக மிகையான குளிருடன் மழையும், அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும் நிறைந்த வானிலை காணப்படுவதோடு, சில இடங்களில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பதனால், நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.