Saturday 18 March 2023

இந்தியாவில் சிக்கிய இலங்கையின் தங்கம்

இலங்கையில் இருந்து கடத்திச் சென்ற 5 கிலோகிராம் தங்கம் தமிழகம் – மண்டபம் பகுதியில் இந்திய அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மன்னார் ஊடாக தமிழகத்துக்கு தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இந்திய சுங்க அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதற்க்கமைய மண்டபம் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது தங்கத்தை கடத்தியவர் கைது செய்யப்பட்டதோடு, அது யாருக்காக கடத்தி வரப்பட்டது என்ற தகவலும் அவரிடமிருந்து அறியப்பட்டுள்ளது.

அதையடுத்து யாருக்காகத் தங்கம் கடத்தப்பட்டதோ, அவருடைய வீடு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.குறித்த நபர்,மரைக்கால் பட்டினத்தில் உள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிஸாரால் வீடு உடைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான சில பொருட்கள், அங்கு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *