இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 302 இலங்கை ஏதிலிகளில் 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதன்படி நேற்று (டிச.27) வியட்நாமின் ஹோசிமின் நகரில் இருந்து வாடகை விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாக்குமூலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பதிவு செய்யப்பட உள்ளதாகவும், அவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தி உட்பட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு.