Friday 17 March 2023

யாழில் ஒன்றிணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள்

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுச் சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள், நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்தார்.

“இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மூத்த போராளி ஈஸ்வரன், பல போராளிகள் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் ஒருங்கிணைக்கப்படாத வகையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *