யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாய், மகள், பேரப்பிள்ளை என 5 பேர் மோட்டார் சைக்கிளில் இருபாலையிலுள்ள தேவாலயத்துக்குச் சென்று வீடு திரும்பும்போது, தாயின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சில்லினுள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்னும் பல முக்கியமான தகவல்களோடு, இன்றைய செய்திகள்.